போதைப் பொருள் கடத்தல் 3 பேர் கைது pt desk
குற்றம்

சென்னை: போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேர் கைது – போலீசார் விசாரணை

சென்னை வளசரவாக்கம் பகுதியில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

PT WEB

சென்னை ஐயப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (29), ஆழ்வார் திருநகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (27), வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (30) ஆகிய மூவரிடம் இருந்து 6 கிராம் மெத் போதைப்பொருள், 10 கிராம் கஞ்சா, ரூபாய் 35 ஆயிரம் பணம், மூன்று செல்போன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது

இவர்கள் மூவரையும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்து, வளசரவாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட மூவரிடமும் வளசரவாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.