ஓட்டல் உரிமையாளரை கத்தியால் வெட்டிய 3 பேர் கைது pt desk
குற்றம்

சென்னை | சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளரை கத்தியால் வெட்டிய 3 பேர் கைது

பூந்தமல்லி அருகே சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளரை கத்தியால் வெட்டிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் இளவரசு (45), இவர், ஓட்டலுக்கு போதையில் வந்த மூன்று பேர், உணவு சாப்பிட்டுள்ளனர் இதையடுத்து சாப்பிட்டதற்கு பணம் கொடுக்க மறுத்ததோடு, மறைத்து வைத்திருந்த கத்தியால் கடையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து விட்டு இளவரசை கத்தியால் வெட்டிவிட்டு கல்லா பெட்டியில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இது குறித்து நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் சாய்கனேஷ், வெட்டுக்காயம் அடைந்த ஓட்டல் உரிமையாளர் இளவரசை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த சம்பவத்தில் ஈடுபட்டது செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த சசிகுமார் (23), அவரது நண்பர்கள் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன் (25), முத்து (30), ஆகியோர் என்பது தெரியவந்தது

இதைத் தொடர்ந்து இவர்கள் மூன்று பேரும் செம்பரம்பாக்கம் சுடுகாடு பகுதியில் பதுங்கி இருந்தபோது போலீசாரை கண்டதும் தப்பியோட முயற்சித்துள்ளனர். அப்போது மூன்று பேருக்கும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.