குற்றம்

ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசபட்ட சம்பவம்: சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு

ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசபட்ட சம்பவம்: சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு

webteam

தாம்பரம் அருகே ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசபட்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் பகுதியில் சிடலப்பாக்கம் ராஜராஜேஸ்வரி  தெருவில் வசித்து வருபவர், சீதாராமன். இவர் தாம்பரம் பகுதியின் மாவட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பு தலைவர் ஆவார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இவரின் வீட்டின் வெளியே நள்ளிரவில் பயங்கரமான சத்தம் கேட்டுள்ளது. இதனால் சீதாராமன் வெளியே சென்று பார்த்து போது, அங்கு பெட்ரொல் குண்டு வீசப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சிட்லப்பாக்கம் போலீசார், அங்கு சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி பெட்ரோல் குண்டு வீசி சென்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் சீதாராமன் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அதில் இரண்டு நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து வீட்டின் வெளியே ஆள் இருக்கிறார்களா என்பதை நோட்டமிட்டு அதன் பிறகு மீண்டும் இருசக்கர வாகனத்தில் வீட்டின் அருகில் வந்து நின்று இரண்டு முறை பெட்ரோல் குண்டு வீசி விட்டு செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இரண்டு நாட்கள் ஆகியும் இதுவரை மர்ம நபர்களை போலீசார் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.