குற்றம்

வங்கி முன்பு நிறுத்தப்படும் பைக்கை திருடும் முதியவர் - சிசிடிவி பதிவில் அம்பலம்

வங்கி முன்பு நிறுத்தப்படும் பைக்கை திருடும் முதியவர் - சிசிடிவி பதிவில் அம்பலம்

kaleelrahman

திட்டக்குடி தனியார் வங்கி முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடும் முதியவரின் சிசிடி வீடியோ சமூக வலைதளங்களில் பரவுவதால் பரபரப்பு.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி பேருந்து நிலையம் அருகே பிரபல தனியார் வங்கியான லட்சுமி விலாஸ் வங்கி செயல்பட்டு வருகிறது இங்கு தினந்தோறும் திட்டக்குடியை சுற்றியுள்ள 100-க்கு மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் வணிகர்கள் பொதுமக்கள் என அனைவரும் அந்த வங்கியில் பண பரிவர்த்தனைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கிராமப்புறங்களில் இருந்து இருசக்கர வாகனங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் வங்கிக்குள் சென்று திரும்பிவர சிலமணி நேரங்களை செலவிடுகின்றனர். இதை பயன்படுத்தி அப்பகுதியில் மர்மநபர்களால் அடிக்கடி வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களில் இரு சக்கர வாகனங்களை திருடி வருவது வழக்கமாக இருந்தது.

இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி மதியம் 3 மணியளவில் அந்த வங்கி முன்பு நின்று இருந்த இரு சக்கர வாகனத்தை முதியவர் ஒருவர் திருட முயற்சி செய்தார். ஏற்கெனவே அங்கு நின்றிருந்த இரண்டு வாகனங்களை திருட முயற்சி செய்த முதியவர் மூன்றாவதாக இருந்த வாகனத்தை கள்ளச்சாவி போட்டு திருடி ஓட்டிச் சென்றார்.

விசாரணையில் அந்த வாகனம் வங்கியின் மேலாளருடைய வாகனம் என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அங்கு இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வுசெய்த போது ஒருமுதியவர் இருசக்கர வாகனத்தைத திருடிச்சென்றது பதிவாகியிருந்தது. இந்தப்பதிவு இன்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்தவை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.