மதுரையில் பேக்கரிக்கு பட்டா கத்தியுடன் வந்த நபர்கள் அதனை அடித்து நொறுக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அதிமுக பிரமுகர் அசோக் என்பவருக்கு சொந்தமான பேக்கரி, முழு முடக்கத்தால் பூட்டியிருந்தது. நேற்று மாலை பேக்கரி வாசலில் பட்டா கத்தியுடன் வந்த 4 பேர் கொண்ட கும்பல், பேக்கரி முன் போடப்பட்டிருந்த கண்ணாடிகள், டேபிள், சேர்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.
அருகில் இருந்த வங்கியின் ஜன்னல் கதவுகள், வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களையும் அந்த கும்பல் அடித்து நொறுக்கி, தப்பிச் சென்றது. இந்த சம்பவம் குறித்து விசாரித்து வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர். முதல்கட்ட விசாரணையில் திமுக பிரமுகர் அசோக் என்பவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து பேக்கரியை அடித்து நொறுக்கியது தெரியவந்தது. இதையடுத்து அசோக் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.