குற்றம்

சட்டவிரோத ஜீப் ரேஸ் - பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் மீது வழக்குப்பதிவு

Veeramani

ஜீப் ரேஸில் ஈடுபட்டதற்காக பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தனுஷின் ஜெகமே தந்திரம் படத்தில் நடித்த ஜோஜு ஜார்ஜ், மலையாள படமான ஜோசப்-பில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர். இவர் கேரள மாநிலம் லாகமணியில் உள்ள எஸ்டேட் பகுதியில் நடந்த பந்தயத்தில் தனது ஜீப்புடன் பங்கேற்றுள்ளார். அவர் வேகமாக ஜீப்பை ஓட்டிச் செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவின.



விவசாயம் செய்ய அனுமதித்த பகுதியில் எந்த வித பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் இல்லாமல் ஜோஜு ஜார்ஜ்ஜீப் பந்தயத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து நடிகர் ஜோஜு ஜார்ஜ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.