accused
accused pt desk
குற்றம்

தூத்துக்குடி: சினிமாவை விஞ்சும் ரெய்டு! இலங்கைக்கு கடத்த முயன்ற 2090 கிலோ கஞ்சா சிக்கியது எப்படி?

webteam

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

கஞ்சாவை கட்டுப்படுத்த தமிழ்நாடு காவல்துறை தீவிரம்!

தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் தமிழக காவல்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் கஞ்சா வேட்டை 4.0 என்ற பெயரில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் உத்தரவின் பேரில் மதுரை மாநகரில் சட்டவிரோதமாக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகர் காவல் நிலையங்களில் கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்டு தலைமறைவாக இருந்த ராஜ்குமார் மற்றும் ஜெ.கே என்ற ஜெயக்குமார் ஆகியோரை தேடி வந்தனர்.

lorry

சிந்தாமணி ரிங்ரோடு வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறைக்கு தகவல்

இதனிடையே மதுரை சிந்தாமணி ரிங்ரோடு வழியாக வாகனங்களில் கஞ்சா கடத்தப்படுவதாக மதுரை கீரைத்துறை காவல்நிலைய உதவி ஆய்வாளர் கருப்பசாமி தலைமையிலான தனிபடையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மதுரை ரிங் ரோடு சிந்தாமணி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, காரின் பின்புறம் 40 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து காரை ஓட்டிவந்த மதுரை எல்லிஸ் நகரைச் சேர்ந்த ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தினர். இதில், ராஜ்குமார் தனது கூட்டாளிகளான ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த சுகுமாறன், தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜா, சுடலைமணி, மகேஸ்குமார் மற்றும் முத்துராஜ் ஆகியோருடன் மதுரை புதூரைச் சேர்ந்த ஜெ.கே என்ற ஜெயக்குமார் என்பவர் மூலம் ஆந்திரா மாநிலம் இராஜமுந்திரியில் இருந்து கஞ்சா வாங்கி போலியான பதிவெண்ணை கொண்ட வண்டியில் கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.

விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!

தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காரில் கடத்திவந்த கஞ்சாவை தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகில் உள்ள வேலவன் புதுக்குளம் என்ற கிராமத்தில் ராஜா என்பவரின் பொறுப்பில் உள்ள தோட்டத்தில் பதுக்கி வைத்திருப்பதாகவும், அதிலிருந்து 40 கிலோ கஞ்சாவை மதுரைக்கு எடுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய சொகுசு கார், 3 செல்போன்கள், மோடம் ஆகியவற்றை பறிமுதல் செய்து போதைப்பொருள் தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ganja bundle

கஞ்சா பதுக்கி வைக்கப்பட்ட இடத்திற்கு பறந்த போலீசார்!

இதனைத் தொடர்ந்து கீரைத்துறை காவல் ஆய்வாளர் பெத்துராஜ் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட இடத்திற்குச் சென்றனர். இதையடுத்து அங்கு நின்றிருந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது அதில் இருந்த சாக்கு மூட்டைகளில் 2090 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்துள்ளது. இதனை காவல் துறையினர் கைப்பற்றிபோது அங்கிருந்து தப்பிக்க முயன்ற சுகுமாறன், ராஜா, சுடலைமணி, மகேஸ்குமார், முத்துராஜ் ஆகிய 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது மதுரையைச் சேர்ந்த ஜெ.கே என்ற ஜெயக்குமார் என்பவர் மூலமாக ஆந்திரா மாநிலம் இராஜமுந்திரியில் இருந்து ரூ.4 கோடி மதிப்பில் 2090 கிலோ கஞ்சாவை வாங்கிவந்து, தூத்துக்குடி ஆரோன் என்பவர் மூலம் கடற்கரை பகுதிகளில் விற்பனை செய்து வருவதாகவும், இந்த கஞ்சாவை இலங்கைக்கு கடத்த இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். பின்னர் சுகுமாறனிடம் நடத்திய விசாரணையில் ஆந்திராவில் இருந்து போலியான நம்பர் பிளேட்டை பயன்படுத்தி கஞ்சா ஏற்றி வந்த வாகனத்தை கோச்சடை பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளதாக கூறியதையடுத்து அந்த சரக்கு வாகனத்தில் இருந்த 50 கிலோ கஞ்சாவையும் கைப்பற்றினர்.

முக்கிய குற்றவாளிகளை தேடும் பணிகள் தீவிரம்!

இதையடுத்து தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளான ஜேகே என்ற ஜெயக்குமார் மற்றும் ஆரோன் ஆகிய இருவரையும் காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். இலங்கைக்கு கடத்த முயன்ற 2090 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படையினரை, காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், துணை ஆணையர் அரவிந்த் ஆகியோர் பாராட்டினர்.

cell phones

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணை ஆணையர் அரவிந்த், "கஞ்சாவை கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்றுள்ளனர், கஞ்சா வேட்டை 4.0 மூலம் தீவிர சோதனையில் ரூ.4 கோடி மதிப்பிலான கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்துளளோம், விரைவில் முக்கிய காரணமான ராஜ்குமார், ஆரோனை கைது. செய்வோம்" என்றார்.