குற்றம்

'புல்லி பாய்' வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட மூவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

EllusamyKarthik

இஸ்லாமிய பெண்களின் புகைப்படத்தை மிகவும் மோசமான வகையில் சித்தரித்திருந்த புல்லி பாய் செயலி விவாகரத்தில் குற்றம் சாட்டப்பட்ட விஷால் குமார் ஜா, ஸ்வேதா சிங் மற்றும் மயங்க் ராவத் ஆகிய மூவரின் ஜாமீன் மனுவை மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மூவரும் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளனர். 

முன்னதாக ஸ்வேதா சிங் மற்றும் மயங்க் ராவத் வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்திருந்தனர் நீதிபதிகள். அதற்கு முன்னதாக கடந்த 14-ஆம் தேதி வரையில் மும்பை சைபர் பிரிவு போலீசாரின் கஸ்டடியில் அவர்கள் இருவரும் இருந்தனர். விஷால் குமாருக்கு 24-ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. 

புல்லி பாய் அப்ளிகேஷன் தொடர்பாக மும்பை போலீசார் தங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து அடையாளம் தெரியாத நபர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சைபர் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மூவரையும் கைது செய்தனர்.