திண்டுக்கல் அருகே சேவல் திருடியதற்காக அண்ணனை குத்திக்கொலை செய்த தம்பியை காவல்துறைனர் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரையை அடுத்துள்ள வி.கல்லுப்பட்டியில் முனியாண்டி மற்றும் அவரது சகோதரரான சந்தோஷ் ஆகியோர் வசித்து வந்தனர். இருவரும் கூலி வேலை செய்து வந்த நிலையில், சந்தோஷ், சண்டை சேவல் ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.
இதனிடையே திடீரென்று அந்த சேவல் காணாமல் போனதாகவும், அதனை முனியாண்டி திருடிச் சென்று விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து இது குறித்து சந்தோஷ் அவரது அண்ணனிடம் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் நடந்த நிலையில், சந்தோஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியைப் பயன்படுத்தி முனியாண்டியை குத்தினார்.
இதில் படுகாயமடைந்த முனியாண்டி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே முனியாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த அம்பாத்துரை போலீசார் சந்தோஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.