குற்றம்

இன்ஸ்பெக்டர் போல் உடையணிந்து அக்காவுக்கு மிரட்டல் விடுத்த தம்பி கைது!

இன்ஸ்பெக்டர் போல் உடையணிந்து அக்காவுக்கு மிரட்டல் விடுத்த தம்பி கைது!

webteam

திருச்சி மாவட்டத்தில் சொத்துப் பிரச்னையில் காவல்துறையினரைப் போல உடையணிந்து சென்று அக்காவுக்கு மிரட்டல் விடுத்த தம்பியை, பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வெங்கடாசலபுரத்தில் வெண்ணிலா என்பவர் தன் கணவருடன் வசிக்கிறார். வெண்ணிலாவின் தந்தை ஏற்கனவே காலமாகிவிட்டார். இந்நிலையில் வெண்ணிலாவிடம் இருந்த வீட்டின் சொத்து பத்திரங்களை கேட்டு அவரது தம்பி ராமஜெயம் என்பவர் அடிக்கடி தகராறு செய்துள்ளார். வீட்டுப்பத்திரத்தை தர வெண்ணிலா மறுத்துவிட்ட நிலையில் அவரை மிரட்டி பத்திரத்தை பறிக்க போலீஸ்காரர் வேடத்தில் ராமஜெயம் வந்துள்ளார்.

நாடகக் கம்பெனியில் காவல்துறை சீருடையும் கூலிங்கிளாசும் வாடகைக்கு வாங்கி அணிந்து கொண்ட ராமஜெயம், தன்னை போலீஸ் அதிகாரி என்று கூறி அக்கா வெண்ணிலாவிடம் ஆவணங்களை கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் போலீஸ் போன்று வந்தது தனது தம்பிதான் என்பதை எளிதில் அடையாளம் கண்ட வெண்ணிலா, ஆவணங்களை தர மறுத்துள்ளார். வாக்குவாதத்தைப் பார்த்து ராமஜெயத்தை சூழ்ந்து கொண்ட கிராம மக்கள், உப்பிலியபுரம் காவல் துறையினரை வரவழைத்து ராமஜெயத்தை ஒப்படைத்தனர். அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.