குற்றம்

தாயின் தகாத உறவால் நிகழ்ந்த கொலை !

தாயின் தகாத உறவால் நிகழ்ந்த கொலை !

Rasus

சென்னையில் 4-ம் வகுப்பு மாணவர் கடத்தி கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை நெசப்பாக்கம் ஏழுமலை தெருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கார்த்திகேயன்(38). இவரது மனைவி மஞ்சுளா(34). அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகின்றார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுகளது மகன் ரித்தீஷ் சாய்(10). நெசப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.

இந்நிலையில் கார்த்திகேயன் மனைவி மஞ்சுளாவிற்கும் சேலையூரை சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. இதை அறிந்த மஞ்சுளாவின் கணவர் பலமுறை அவரை எச்சரிக்கை செய்துள்ளார். இந்நிலையில் நேற்று டியூசன் சென்ற சிறுவன் ரித்திஷ் வீடு திரும்பவில்லை. பின்னர் கார்த்திகேயன் டீயூசனில் சென்று விசாரித்த போது நாகராஜ் என்ற நபர் பிள்ளையை அழைத்து சென்றதாக தெரிவித்தனர்.

இதனை அறிந்த கார்த்திகேயன் உடனே நாகராஜை செல்போனில் தொடர்பு கொண்டபோது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
 இது தொடர்பாக கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் சிறுவன் கொலை தொடர்பாக நாகராஜை போலீசார் கைது செய்துள்ளனர். மஞ்சுளாவுக்கும் தனக்கும் இருந்த உறவிற்கு மகன் ரித்தீஷ் இடையூறாக இருந்ததாகவும், அதனால் சிறுவனை கொலை செய்ததாகவும் போலீசார் விசாரணையில் நாகராஜ் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உண்டா..? என்ற கோணத்திலும் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.