குற்றம்

காதலில் 10-ம் வகுப்பு மாணவனை கடத்திய இளம்பெண் !

காதலில் 10-ம் வகுப்பு மாணவனை கடத்திய இளம்பெண் !

Rasus

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 10-ஆம் வகுப்பு மாணவரை கடத்திச் சென்ற இளம்பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வேடகட்டமடுவு பகுதியைச் சேர்ந்த விவசாயி தசரதனின் 10-ஆம் வகுப்பு படிக்கும் மகனுக்கும், அவரது உறவினர் மகளுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதையறிந்த தசரதன், இருவரையும் கண்டித்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர் காணாமல் போனதையடுத்து, அவரது தந்தை தசரதன் காவல்நிலையத்தில் புகா‌ர் அளித்திருக்கிறார்.

தொடர்ந்து மாணவரை, அந்த இளம்பெண் கடத்திச் சென்று பெங்களூரில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பின்னர், அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அந்த மாணவரை குழந்தைகள் நலக் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், மாணவரைக் கடத்திச் சென்ற இளம் பெண்ணை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.