இறந்த மாணவரின் வீடு கூகுள்
குற்றம்

பீகார் | அதிக மதிப்பெண் எடுக்க முடியவில்லை என விரக்தி.. 10ம் வகுப்பு மாணவர் எடுத்த விபரீத முடிவு

மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்தில் மதிப்பெண் எடுப்பது அவசியமான ஒன்று என்றாலும் மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கை அல்ல

Jayashree A

மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்தில் மதிப்பெண் எடுப்பது அவசியமான ஒன்று என்றாலும் மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கை அல்ல... வாழ்க்கையில் படிப்பு ஒரு அங்கம் தானே தவிர... படிப்பே வாழ்க்கை அல்ல... மாணவர்களுக்கு படிப்பு சரிவர வரவில்லை என்றால் அவர்கள் தங்களின் வாழ்க்கைக்காக கைத்தொழில் கற்றுத்தேர்ந்து சமூகத்தில் உயர்ந்த பதவியினை அடையலாம்.

துப்பாக்கி குண்டு

ஆனால், அதனை புரிந்து கொள்ளாமல் மாணவர்கள் பல நேரங்களில் தவறான முடிவுகளை எடுத்துவிடுகின்றனர். இதுபோன்ற சம்பவம் ஒன்று பீகார் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தன்னால் அதிகமதிப்பெண் எடுக்க முடியவில்லை என்று தனது வாழ்க்கையை முடித்துக்கொண்ட சம்பவமானது அனைவரையும் சோதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

பீகார் மாநிலம் பாகல்பூரை அடுத்த கஹல்கான், ஆனந்த் விஹார் காலனியைச் சேர்ந்தவர் ராஜீவ் குமார். இவரது மகன் சோமில் ராஜ். 14 வயதான சோமில் ராஜ் அப்பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த இருநாட்களுக்கு முன் சோமில் ராஜ் எழுதிமுடித்த அரையாண்டு தேர்வின் மதிப்பெண்ணானது வெளிவந்துள்ளது. இதில் சோமில்ராஜ் மூன்று பாடங்களில் 50 சதவீதத்திற்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்.

கொல்கத்தா குற்றம்

சோமில்ராஜ் தேர்வில் அதிகமதிப்பெண் பெற்று முதலிடம் பிடிக்கவேண்டும் என்று நினைத்திருக்கலாம். மாறாக அவர் குறைந்த மதிப்பெண் பெற்றதும், தனது வாழ்க்கையே முடிந்தது போன்று மன அழுத்தம் கொண்டு தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பின் மூலம், தான் வாழ்க்கையை முடித்துக்கொள்வதாக குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, தனது தந்தையின் கைத்துப்பாக்கியால் தலையில் சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.

சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் பிரேதத்தைக்கைப்பற்றி உடற்கூராய்விற்கு அனுப்பியபின் தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகிறது.

இது போன்று சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க... ஒவ்வொரு மாணவர்களுக்கும் வாழ்க்கையைப்பற்றிய புரிதல் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு பள்ளிகளிலும், வீடுகளிலும் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனை அவசியமாகிறது