குற்றம்

”இந்த மூட்டையில என்னப்பா இருக்கு”.. சோதனையிட்ட அதிகாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

”இந்த மூட்டையில என்னப்பா இருக்கு”.. சோதனையிட்ட அதிகாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

webteam

நாமக்கல் அருகே சொகுசு காரில் கடத்திச் சென்ற 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 300 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், ராஜஸ்தானைச் சேர்ந்த 2 இளைஞர்களை கைது செய்தனர்.

நாமக்கல் காவல் ஆய்வாளர் சங்கர பாண்டியன் தலைமையிலான போலீசார் நாமக்கல் - திருச்சி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது குஜராத் மாநில பதிவெண் கொண்ட சொகுசு கார் ஒன்று திருச்சி நோக்கிச் சென்றது. அதை தடுத்து சோதனையிட்டதில் மூட்டை, மூட்டையாக குட்கா பதுக்கி கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் ராஜஸ்தானைச் சேர்ந்த பூபேந்திர சிங் (24), பிரேமா ராம்( 28) ஆகிய இருவரும் சொகுசு கார் மூலம் பெங்களூரில் இருந்து திருச்சிக்கு குட்கா பொருட்களை கடத்திச் சென்றது தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு இருவரையும் கைது செய்த போலீசார், சொகுசு காரை மற்றும் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 300 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து பூபேந்திர சிங், பிரேமா ராம் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த குட்கா பொருட்கள் எங்கிருந்து வாங்கப்படுகிறது, அதனை திருச்சி பகுதியில் யார் யாருக்கெல்லாம் விற்பனை செய்கிறார்கள் என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.