குற்றம்

”மல்லையா, நீரவ் மோடி, சோக்ஸி இடமிருந்து ரூ.18000 கோடி வசூல்” - மத்திய அரசு தகவல்

EllusamyKarthik

விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸி ஆகியோரிடமிருந்து 18000 கோடி ரூபாயை வங்கிகள் வசூலித்துள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனை அரசுத் தலைமை வழக்கறிஞர் துஷர் மேத்தா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.  

கடந்த 2021 ஜூலை வரை விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் சோக்ஸி ஆகியோருக்கு சொந்தமான சுமார் 13109 கோடி ரூபாய் மதிப்புமிக்க சொத்துகளை விற்றதன் மூலம் வங்கிகள் பெற்றதாக கடந்த 2021 டிசம்பரில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸி பண மோசடி வழக்கில் குற்றவாளிகளாக உள்ளனர். பண மோசடி வழக்கில் தற்போது மூன்று பேர் மீதும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் மதிப்பு 67000 கோடி ரூபாய் எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.