குற்றம்

ஆஸ்திரேலிய பெண்ணை கொலை செய்த இந்தியரை பிடிக்க 1 மில்லியன் டாலர் பரிசு! - முழு விபரம் என்ன?

Abinaya

2018ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் , இந்தியாவை சேர்ந்த செவிலியர் குற்றஞ்சாட்டப்பட்டு டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 21, 2018 அன்று கார்டிங்லி என்ற 24 வயது பெண் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. மறுநாள் காலை கெய்ர்ன்ஸுக்கு வடக்கே உள்ள வாங்கெட்டி கடற்கரையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. 38 வயதான ராஜ்விந்தர் சிங், இந்தியாவுக்கு தப்பிச் வருவதற்கு முன், கார்டிங்லிகை கடற்கரையில் கொன்றதாகக் கூறப்படுகிறது. பஞ்சாபை சேர்ந்த ராஜ்விந்தர் சிங் , குயின்ஸ்லாந்தில் இன்னிஸ்ஃபைல் டவுனில் வசித்து வந்துள்ளார். அங்கு அவர் செவிலியர் உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.

ஆஸ்ரேலியாவில் குயின்ஸ்லாந்தின் பகுதியில் இருக்கும் வாங்கட்டி கடற்கரையில் கார்டிங்லி என்ற மருந்தகத் தொழிலாளி தனது நாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்டுள்ளார். அதன்பின் இரண்டு நாட்களுக்கு பிறகு ராஜ்விந்தர் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறியுள்ளார். அதுவும் தனது வேலை, மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை விட்டு தப்பித்து வந்துள்ளார்.


இதனை தொடர்ந்து, தீவிர விசாரணை செய்த குயின்ஸ்லாந்து காவல்துறையால், கார்டிங்லிகை கொலை செய்தது ராஜ்விந்தர் சிங் தான் என்பதை உறுதி செய்துள்ளது. ராஜ்விந்தர் சிங் பிடிப்பத்தில் சிரமம் ஏற்பட்டதை தொடர்ந்து, ராஜ்விந்தர் பற்றிய தகவல் கொடுத்தவருக்கு குயின்ஸ்லாந்து காவல்துறை 1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை வெகுமதியாக வழங்கி உள்ளது. ஆஸ்திரேலிய அரசாங்கம், மார்ச் 2021 இல், சிங்கை நாடு கடத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கைக்கு இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து , ராஜ்விந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளது.

கொலைக்காக காரணம் குறித்து விரிவாக எந்த தகவலும் வெளிவராத நிலையில், ராஜ்விந்தர் சிங்கை விசாரிக்கும் போது மேற்கொண்ட தகவல்கள் பெறமுடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் கார்டிங்லியின் தாய் வனேசா கார்டினர் கூறுவது, ‘தன் மகள் அழகானவள், ஆன்மீகம் நிறைந்தவள். அவளுடைய வாழ்க்கை மிகவும் சீக்கிரமாகவே எடுக்கப்பட்டுவிட்டது. அவளது நண்பர்களும் குழந்தைகளும் திருமணம் செய்துகொள்வதை நான் பார்க்கும் போது, இப்போது அவள் வாழ்க்கையில் தவறவிட்ட அனைத்தையும் நினைத்துப் பார்க்கிறேன். அவளது முழு நேர வேலையில் சேர இருந்தாள். ஆனால் எல்லாம் முடிக்கப்பட்டு விட்டது.” என்று தனது வேதனையை விவரித்துள்ளார்.