வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தில் துணிக் கடை ஊழியர்கள் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
பஜார் வீதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான துணிக்கடை ஒன்று இயங்கி வருகிறது. அங்கு சென்ற நபர்கள் சிலர் திருமாவளவனின் பிறந்தநாள் விழாவுக்கு நன்கொடை கேட்டதாக கூறப்படுகிறது. கடை ஊழியர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள், கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.