ராஜஸ்தானில் ஏடிஎம் மையத்தில் பணம் வைக்கப்பட்டிருந்த இயந்திரத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பஜார் தெருவில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. முக்கியமான பகுதியில் உள்ள ஏடிஎம் என்பதால் நாள்தோறும் அதிகமான வாடிக்கையாளர்கள் இங்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இரவு நேரத்தில் ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த நான்கு கொள்ளையர்கள், பணம் உள்ள ஏடிஎம் மிஷினை படிப்படியாக நகர்த்தி திருடி சென்றுள்ளனர். பணம் நிரப்ப வந்த வங்கி அதிகாரிகள் மிஷின் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர் கொள்ளைபோன ஏடிஎம் மிஷினில் ஐந்து லட்ச ரூபாய் பணம் இருந்ததாக அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் ஏடிஎம் மிஷினை கொள்ளையர்கள் திருடி செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதை வைத்து. கொள்ளையர்களை தேடும் பணியில் காவல் துறையினர் இறங்கி உள்ளனர்.