வங்காள நடிகரின் உதவியாளரிடம் அந்தரங்க வீடியோவை வெளியிடுவதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்ததால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வங்காள நடிகர் அன்குஷ் ஹஸ்ராவின் உதவியாளர் பின்டு டே(36). இவர் மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவில் வசித்துவந்துள்ளார். செவ்வாய்க்கிழமை அவர் தனது வீட்டில் குளிக்கச்சென்றபோது குளியலறையில் டவலால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
பின்டுவின் குடும்பத்தார் இதுபற்றி கூறுகையில், யாரோ ஒருவர் பணம் தராவிட்டால் பின்டுவின் அந்தரங்க வீடியோவை வெளியிட்டு விடுவதாக தொலைபேசியில் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸாரிடம் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.