குற்றம்

ஹனிட்ராப்: பாகிஸ்தான் பெண் ஏஜென்டுக்கு தகவல்களை கசியவிட்ட ராணுவ வீரர் கைது

ஹனிட்ராப்: பாகிஸ்தான் பெண் ஏஜென்டுக்கு தகவல்களை கசியவிட்ட ராணுவ வீரர் கைது

Veeramani

பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பில் பணிபுரியும் பெண் ஏஜெண்டால் ஹனிடிராப் செய்யப்பட்டு, தகவல்களை கசியவிட்ட இந்திய ராணுவ வீரர் ஒருவரை ராஜஸ்தான் போலீஸார் கைது செய்தனர்.

பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பில் பணிபுரியும் பெண் ஏஜென்டுக்கு தகவல்களை கசியவிட்டதாக ஜோத்பூரில் உள்ள அதிமுக்கியத்துவம் வாய்ந்த படைப்பிரிவில் பணியாற்றும் இந்திய ராணுவ வீரர் ஒருவர்  செய்யப்பட்டுள்ளார் என்று ராஜஸ்தான் காவல்துறையின் உளவுத்துறை டிஜிபி உமேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.


ஜோத்பூரில் உள்ள இந்திய இராணுவத்தின் முக்கிய படைப்பிரிவில் பணியாற்றும் பிரதீப் குமார் சமூக ஊடகம் மூலம் பாகிஸ்தான் பெண் ஏஜெண்ட்டுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

சுமார் ஆறு முதல் ஏழு மாதங்களுக்கு முன்பு, பிரதீப் குமாருக்கு அந்த பெண்ணிடமிருந்து செல்போனில் ஒரு அழைப்பு வந்தது, அதன் பிறகு இருவரும் வாட்ஸ்அப்பில் மெசேஜ், குரல் அழைப்பு மற்றும் வீடியோ கால் மூலம் பேசத் தொடங்கினர். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் வசிப்பவர் என்றும், தன் பெயர் சதம் எனவும் அந்த  பெண் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.



திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் இந்திய ராணுவம் தொடர்பான ரகசிய ஆவணங்களை தரவேண்டும் என அப்பெண் கேட்டதனால், பிரதீப் குமார் தனது அலுவலகத்தில் இருந்து ராணுவம் தொடர்பான ஆவணங்களின் புகைப்படங்களை திருடி அந்த பாகிஸ்தான் பெண் ஏஜெண்ட்டுக்கு அனுப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதனால் பிரதீப் குமார் மீது  இந்திய அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம் - 1923ன் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.