குற்றம்

அரியலூர்: மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிமுக நிர்வாகி கைது

அரியலூர்: மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிமுக நிர்வாகி கைது

kaleelrahman

அரியலூரில் மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அதிமுக நிர்வாகி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியை அடுத்த மண்ணுழி கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (60). அ.தி.மு.க. கிளைச் செயலாளராக உள்ள இவர், 27 வயது மாற்றுத்திறனாளி பெண்ணுடன் பழகி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண்ணின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையடுத்து அந்த பெண்ணின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் கயர்லாபாத் காவல் துணை ஆய்வாளர் ராஜவேல் விசாரணை நடத்தினார். பின்னர், திருமானூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தலைமறைவாக இருந்த தியாகராஜனை கைது செய்து, அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல்நிலைய போலீசார் அவரை கைது செய்தனர்.