குற்றம்

அரியலூர்: கல்லூரி மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் கைது

அரியலூர்: கல்லூரி மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் கைது

kaleelrahman

அரியலூரில் கல்லூரி மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் காடூரை சேர்ந்தவர் தமிழழகன். இவர், அரியலூரில் உள்ள பிரபல துணிக்கடையில் வேலை பார்க்கும் போது மல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், அந்த மாணவி தற்போது 5 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்த விவகாரம் மாணவியின் தாய்க்கு தெரியவர, அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார். தன்னுடைய மகளை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தமிழழகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.