அரியலூரில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 23 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் பணம் கொள்ளை போனது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியரான இவரும் இவரது மனைவி ஆசிரியை ஹேமலதாவும் தஞ்சை மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
அப்போது வீட்டின் பூட்டு உடைத்திருப்பது தெரியவந்தது. உடனே வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 23 சவரன் நகை மற்றும் ரூ. 1 லட்சம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.