குற்றம்

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு உட்பட 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

நிவேதா ஜெகராஜா

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு உட்பட 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வருமானத்திற்கு அதிகமாக 58 கோடியே 44 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துகளை குவித்ததாக முதல் தகவல் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. திருவாரூரில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், அவரது இரண்டு மகன்கள் உட்பட 6 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அமைச்சர் பதவியை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபட்டதாக காமராஜ் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக மன்னார்குடியிலுள்ள காமராஜ் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.