இருவர் கைது pt desk
குற்றம்

ஆந்திரா டூ சென்னை: காரில் கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது

ஆந்திராவில் இருந்து காரில் கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.

PT WEB

செய்தியாளர்: எழில்

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து திட்டமிட்ட குற்ற நுண்ணுறிவு பிரிவு காவல் துறையினர் தமிழக ஆந்திர எல்லையான எளாவூர் ஒழுங்கிணைந்த சோதனை சாவடியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த கார் ஒன்றை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். காரில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அந்த காரை சோதனையிட்டனர். அதில் பண்டல் பண்டலாக கஞ்சா இருப்பது தெரியவந்தது.

10 கிலோ கஞ்சா பறிமுதல்

இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி சென்றதும் சென்னையைச் சேர்ந்த ஜஸ்டின் செல்வகுமார் மற்றும் உசிலம்பட்டியைச் சேர்ந்த சௌந்தர பாண்டியன் என்பதும் தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரையும் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.