குற்றம்

சைபர் தாக்குதலில் 45 லட்சம் 'ஏர் இந்தியா' பயணிகள் விவரம் திருட்டு

webteam

மத்திய அரசின் விமான நிறுவனமான ஏர் இந்தியாவின் கடந்த 10 ஆண்டு கால வாடிக்கையாளர் விவரங்கள் சைபர் தாக்குதல் மூலம் கசிந்து விட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “வாடிக்கையாளரின் டிக்கெட் விவரங்கள், பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு, தொலைபேசி எண்கள் ஆகியவை கடந்த பிப்ரவரியில் தனது தகவல் தொகுப்பு பிராசசரில் இருந்து திருடப்பட்டுள்ளது. 2011 ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் இந்த ஆண்டு பிப்ரவரி 3 வரை ஜெனீவாவைச் சேர்ந்த பயணிகள் தகவல் நிறுவனமான SITA-வால் பதிவு செய்யப்பட்டிருந்த சுமார் 45 லட்சம் வாடிக்கையாளர்களின் விவரங்கள் கசிந்துள்ளது. இந்தத்தகவல் 3 மாத விசாரணைக்குப் பிறகு தெரியவந்துள்ளது. ஆனால் இதில் பயணிகளின் பாஸ்வார்டு மற்றும் சிவிவி எண் திருடப்படவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.