Bengaluru student
Bengaluru student  PT
குற்றம்

Photo shoot-க்கு மறுத்த பெற்றோர்; பெங்களூரு மாணவி எடுத்த விபரீத முடிவு-சோகத்தில் முடிந்த புதுவருடம்!

Jayashree A

இளைஞர்களும் யுவதிகளும் தங்களின் புகைப்படத்தை ஃபோட்டோ ஷூட் செய்து அதனை இன்ஸ்ட்ராகிராம், எக்ஸ் தளம், வாட்சப் போன்ற சோஷியல் மீடியா தளங்களில் பதிவேற்றம் செய்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். அதில் சில புகைப்படமோ அல்லது வீடியோவோ ட்ரெண்டாக மாறி அவர்களை அடையாளம் காணவைத்து திரும்பிப் பார்க்கவும் வைக்கிறது. இப்படி லைக்கிற்கும் கமெண்டுகளுக்கும் ஆசைப்பட்டு இளம்தலைமுறையில் சிலர் சிலர் சோஷியல் மீடியாவுக்கே அடிமையாக மாறிவிடுகின்றனர்.

இப்படி ஒரு நிகழ்சிதான் பெங்களூருவில் நடந்துள்ளது. பெங்களூரு சுதாமாநகரில் வசித்து வந்தவர் 21 வயதான கல்லூரி மாணவி வர்ஷிணி. இவர் தனது புகைப்படத்தை சமூகவளைதளங்களில் அடிக்கடி பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதைக்கண்ட அவரின் பெற்றோர் வர்ஷிணிக்கு பல அறிவுரைகள் கூறி வந்துள்ளனர். இருப்பினும் பெற்றோர்களின் அறிவுரைகளை காதில் வாங்காமல் வர்ஷிணி சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்துள்ளார்.

இந்நிலையில், புத்தாண்டு தினத்தன்று மாணவி தன் புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் பகிர்வதற்காக முறைப்படி ஃபோட்டோ ஷூட் செய்வதற்கு அருகில் உள்ள மாலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் வர்ஷிணியின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததுடன், ஃபோட்டோஷூட் செய்வதற்கும் அனுமதிக்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில், மனமுடைந்த மாணவி இரவு தனது அறையில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. இந்நிலையிலிது குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.