குற்றம்

'ரூ.50 லட்சம் கொடுக்கலனா வீடியோவை வெளியிடுவேன்'- சிறுமியை மிரட்டியவர் கைது

kaleelrahman

லூடோ விளையாட்டு மூலம் பழகி வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து ரூ.50 லட்சம் பணம் கேட்டு சிறுமி மற்றும் அவரது தாயை மிரட்டியதாக பட்டதாரி இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயது பெண். இவரது மகள் திருவேற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10 வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு செல்போன் விளையாட்டான லூடோவில் திருவெற்றியூரைச் சேர்ந்த டிப்ளமோ பட்டதாரியான ஜோக்கர் என்கிற விக்னேஷ் என்பவர் அறிமுகமாகி பேசி வந்துள்ளார்.

இந்நிலையில், இவர்களிடையே நட்பு வளர்ந்ததை அடுத்து செல்போன் எண் பரிமாறி TELEGRAM, HELLO YO போன்ற ஆப் வழியாக பேசி வந்துள்ளனர். இதில், இருவரும் நெருங்கிப் பழக துவங்கியுள்ளனர்.

இதையடுத்து நாளடைவில் விக்னேஷ், சிறுமியை வீடியோ காலில் வர வற்புறுத்தியுள்ளார். இதனை மறுத்த சிறுமியிடம், விக்னேஷ் ஆபாச உரையாடல்களை வீட்டில் கூறிவிடுவேன் என மிரட்டி பலமுறை ஆடையில்லாமல் வீடியோ காலில் தோன்ற செய்துள்ளார். இவ்வாறு வீடியோ காலில் சிறுமிஇருப்பதை விக்னேஷ் பதிவு செய்து வைத்துக்கொண்டு தொடர்ந்து மிரட்டி வந்துள்ளளார்.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் சிறுமி வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த விக்னேஷ், சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று வீடியோவை அவரிடம் காட்டி மிரட்டி கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுமி மன உளைச்சலில் இருந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் விசாரித்தபோது நடந்தவற்றை கூறிய சிறுமி அழுதுள்ளார்.

இது தொடர்பாக பெற்றோர், விக்னேஷை தொடர்பு கொண்டு கேட்டபோது எனக்கு ஒரு வீடியோவிற்கு ரூ.25 ஆயிரம் வீதம் 50 லட்சம் பணம் தர வேண்டும். பணத்திற்காக நான் என்ன வேண்டுமானலும் செய்வேன். இல்லையென்றால் உனது மகள் இருக்கும் வீடியோவை இணையத்தில் வெளியிடுவேன் எனக்கூறி தைரியமாக தனது G-PAY எண்ணையும் அனுப்பி பணம் கேட்டுள்ளார்.

இது பற்றி சிறுமியின் தாய், ஆவடி மாநகர துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட திருமுல்லைவாயல் காவல் ஆய்வாளர் விஜயராகவன் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விக்னேஷ் மீது போக்சோ உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்த பின்னர் அவரை திருவள்ளூர் மகிளா நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.