சில தினங்களுக்கு முன்பாக கைது செய்யப்பட்ட கஞ்சா வியபாரிகளோடு தொடர்பில் இருந்ததாக நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் (26), செயது சாகி (22), மொஹம்மது ரியாஸ் அலி (26), பைசல் அஹமது (26) உப்டட 4 பேரிடம் நேற்று ஒரு நாள் முழுவதும் விசாரணை செய்யப்பட்டு வந்தது. விசாரணை முடிவில், நான்கு பேரும் இன்று கைதாகியுள்ளனர்.
திருமங்கலம் போலீசார் விசாரணை செய்துவந்த நிலையில், இன்று அலிகான் துக்ளக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை விவகாரத்தில், கல்லூரி மாணவர்கள் உட்பட 10 பேரை ஜெ.ஜெ நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.