ஷஜீல் எக்ஸ் தளம்
குற்றம்

கேரளா: கார் மோதியதில் கோமாவுக்கு சென்ற 9 வயது சிறுமி... 10 மாதங்களுக்கு பிறகு பிடிபட்ட நபர்!

9 வயது சிறுமி மீது மோதி விபத்துக்குள்ளான காரையும், அதை ஓட்டியவரையும் 10 மாதங்கள் கழித்து காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

Jayashree A

கேரளா வடகரையச் சேர்ந்தவர், 9 வயது சிறுமி த்ரிஷானா. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி இவர் தனது பாட்டியுடன் வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, எங்கிருந்தோ வந்த கார் ஒன்று இவர்கள் மீது மோதியுள்ளது. பின் நிற்காமல் சென்றுள்ளது. இதில் சம்பவ இடத்தில் அவரது பாட்டி இறந்த நிலையில் பலத்த காயமடைந்த த்ரிஷானா சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். தற்பொழுது அவர் கோமா ஸ்டேஜில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரின் ஓட்டுநரை காவல்துறையினர் தேடிவந்தனர். ஆனாலும் விபத்தை ஏற்படுத்திய காரை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகையால் வழக்கானது சிபிசிஐடி-யிடம் சென்றது. அவர்கள் சம்பவம் நடந்த இடத்திலிருந்து 40 கி.மீ சுற்றளவில் உள்ள நூற்றுக்கணக்கான சிசிடிவி காட்சிகளை சேகரித்தும், 19,000 வாகன சோதனை மற்றும் 50,000 அலைபேசி அழைப்பு, அங்கு இருந்த பலரிடமும் வாக்குமூலம் eன பல வழிகளில் வழக்கின் குற்றவாளியைத் தேடி வந்தனர்.

விபத்து

இது இப்படி இருக்க.. சமீபத்தில் ஒரு காரானது சுவற்றில் மோதி டேமேஜ் ஆனதாக கூறி கேரளாவின் பூமாரி பகுதியைச் சேர்ந்த ஷஜீல் என்பவர் இன்சூரன்ஸ் க்ளெய்ம் எடுத்துள்ளார். இச்சம்பவம் சிபிசிஐடிக்கு தெரியவரவே, ஷஜீலை பற்றிய தகவலை போலீசார் சேகரித்து விசாரித்துள்ளனர். அதன் முடிவில், தாங்கள் தேடிவந்த கார் விபத்தின் குற்றவாளி ஷஜீல்தான் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

சம்பவம் நடந்த அன்று ஷஜீல் காரில் சென்றபொழுது சிறுமி த்ரிஷானா அவ்வழியாக வந்துள்ளார். எதிர்பாராதவிதமாக காரானது த்ரிஷானாவை மோதிவிட்டு நிற்காமல் சந்து சந்தாகப் புகுந்து சென்றுள்ளது. இதில் த்ரிஷானாவின் மீது மோதிய வேகத்தில் ஷஜீல்காரின் முகப்பு சேதமாகி உள்ளது.

ஆனால் இதை மறைக்க அவர் பல மாதங்கள் காத்திருந்துள்ளார். 10 மாதங்களுக்குப்பின் ஷஜீல் தனது காருக்கான க்ளெய்ம் எடுப்பதற்காக இன்ஸூரன்சாரிடம் தனது கார் சுவற்றில் மோதியதால் முகப்பு சேதமானதாகவும், அதற்கு இன்சூரன்ஸ் வேண்டும் என்றும் கேட்டு பெற்றுள்ளார். மேலும் போலீசாரிடம் மாட்டாமல் இருக்க, தனது காரின் நிறத்தையும் மாற்றிவிட்டு தானும் வெளிநாட்டிற்கும் சென்று செட்டிலாகி இருக்கிறார். இது அனைத்தையும் தெரிந்து கொண்ட சிபிசிஐடி போலீசார், வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ஷஜீலை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.