குற்றம்

உத்தரபிரதேச தொழிலதிபர் வீட்டில் ரூ.177 கோடி ரொக்கம் பறிமுதல்

JustinDurai
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த தொழிலதிபர் பியூஷ் ஜெயின் வீட்டில் 177 கோடி ரூபாய்கும் மேல் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதுதான் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட அதிகபட்ச ரொக்கத் தொகை என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வாசனை திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நடத்தி வரும் தொழிலதிபரான பியூஷ் ஜெயின் வீட்டில் கடந்த 22ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 177 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து கனோஜ் பகுதியில் செயல்படும் தொழிற்சாலையில் சுமார் 17 கோடி ரூபாய் ரொக்கம், 23 கிலோ தங்கம் மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிப்பில் பயன்படும் சந்தனமர எண்ணெய் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஜிஎஸ்டி செலுத்தாமல் பொருட்களை விற்றதன் மூலம் கிடைத்தது என பியூஷ் ஜெயின் வாக்குமூலம் அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.