வேலூர் காட்பாடியில் திருமணத்திற்கு மறுத்த பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சபீர். எம்பிஏ மாணவரான இவர் சுபத்ரா தேவி என்ற பெண்ணை காதலித்து வந்தாக தெரிகிறது. இவர்கள் இருவரும் 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் பெண் வீட்டிற்கு தெரிந்ததையடுத்து மறுப்பு தெரிவித்துள்ளனர். இவர்கள் காதல் தொடர்ந்ததையடுத்து சபீர் மீது பெண்ணின் பெற்றோர்கள் இரண்டு முறை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். காவல்துறையினர் இருதரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தாக தெரிகிறது. பெற்றோருக்கு தெரியாமல் இருவரும் பேசி வந்துள்ளனர். தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து சபீர் வற்புறுத்தியதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று இருவரும் வேலூரில் பகுதியில் உள்ள உணவகத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது இருவருக்குமிடையே காரசார விவாதம் நடைப்பெற்றுள்ளது. தன்னை திருமணம் செய்துக்கொள்ள சபீர் வற்புறுத்தியதாக தெரிகிறது. ஆனால் பெற்றோரை மீறி தான் எதுவும் செய்ய மாட்டேன் என அந்தப்பெண் கூறியதாக தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த சபீர் உணவகத்தில் இருந்த கத்தியை எடுத்து சுபத்ராவின் கழுத்தை அறுத்துள்ளனர். அங்கிருந்த பொதுமக்கள் சுபத்ராவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சபீரை மடக்கி பிடித்த பொதுமக்கள் வேலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.சபீர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுபத்ராவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு கழுத்தில் 8தையல் போடப்பட்டுள்ளது.