ஐஐடி-யில் படித்து வரும் 20 வயது மாணவி ஒருவர் நேற்று இரவு தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, ஒரு நபர் கையில் கட்டையை வைத்துக்கொண்டு இளம் பெண்ணின் முடியை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண் சத்தமிட்டு அங்கிருந்து தப்பி ஓடி ஐஐவு காவலாளிகளிடம் கூறியுள்ளார். இதைக் கண்ட அந்த நபர், அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டதன் பேரில் கோட்டூர்புரம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் இளம் பெண்ணை கட்டையைக் காட்டி மிரட்டி முடியை பிடித்து இழுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் ரோஷன் குமார் (22) என்பது தெரிய வந்தது. இவர் ஐஐடி வளாகத்தில் உள்ள Food Court ல் "Mumbai Chaat" என்ற கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
நேற்று உடல்நிலை சரியில்லை என விடுப்பு எடுத்து, பின் இரவு நேரத்தில் தனியாக வந்த இளம் பெண்ணை கட்டையைக் காட்டி மிரட்டி முடியை பிடித்து தாக்கி பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து ரோஷன் குமாரை கைது செய்துள்ள கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.