குற்றம்

சென்னை: சைதாப்பேட்டை ரேஷன் கடையில் 7.36 லட்சம் ரூபாய் திருடியவர் கைது

சென்னை: சைதாப்பேட்டை ரேஷன் கடையில் 7.36 லட்சம் ரூபாய் திருடியவர் கைது

EllusamyKarthik

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் இயங்கி வந்த ரேஷன் கடையில் 7.36 லட்சம் ரூபாயை திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் கோபி என போலீசார் தெரிவித்துள்ளனர். அவரிடமிருந்து 4.45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்டுள்ள கோபி இதற்கு முன்னதாக 6 குற்ற வழக்குகளில் கைதாகி தண்டனை பெற்று சிறையிலிருந்து வெளிவந்த நிலையில், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகி உள்ளது. 

கொரோனா நிவாரண நிதியாக மக்களுக்கு விநியோகிக்கப்பட 7 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் அந்த கடையில் வைக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் அந்த  கடையில் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது. கைதாகியுள்ள கோபி இடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.