சென்னையில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலர் கைது செய்யப்பட்டார்.
ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் அளித்த புகாரில்,கடந்த 30ஆம் தேதி பணி முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிச் சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறியிருந்தார்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல் துறையினர், திருவொற்றியூர் காவல் நிலைய காவலர் வனராஜா என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை கண்டறியந்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
இதையும் படிக்க: திமுக வட்ட செயலாளர் செல்வம் கொலை வழக்கு: திருச்சி சமயபுரத்தில் இருவர் கைது