பைக் திருடியவர்
பைக் திருடியவர் PT
குற்றம்

’கொஞ்சம் செக் பண்ணட்டா’-ஷோரூமில் பைக் வாங்குவதுபோல் நடித்து ஓட்டிசென்ற நபர்; 20 கி.மீ-ல் ட்விஸ்ட்!

PT WEB

அரியலூர் - பைக் ஷோரூமில் பைக் வாங்குவது போல் நடித்து பைக்கில் உயரம் சரியாக இருக்கிறதா என ஏறி அமர்ந்து பவலா காட்டி ஓட்டி சென்ற நபரால் பரபரப்பு

அரியலூர் நகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே யமஹா பைக் ஷோரூம் வைத்துள்ளவர் வெங்கடேன். இன்று காலையில் வழக்கம்போல் ஷோரூம் திறக்கப்பட்டது.

அப்பொழுது சுமார் 29 வயது மதிக்கத்தக்க தலையில் துண்டு கட்டிய நபர் ஒருவர் பைக் ஷோரூம் கடையில் உள்ளே நுழைந்தார்.

அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டரை லட்சம் மதிப்புடைய யமஹா R15 பைக்கின் விலை கேட்டறிந்த அவர் அந்த பைக்கை வாங்குவது போல் நடித்துள்ளார்.

பின்னர் அந்த பைக்கினை ஆன் செய்வது போல் நடித்து உயரம் சரியாக உள்ளதா என்று சோதனை செய்வது போல் ஏறி அமர்ந்துள்ளார்.

திடீரென அந்த பைக்கினை ஆன் செய்து வண்டியை ஓட்டி சென்று விட்டார். இதனை சன்றும் எதிர்பாராத கடையின் ஊழியர் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

உரிமையாளர் வெங்கடேஷன் அரியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து அரியலூர், கயர்லாபாத், உடையார்பாளையம் ஆகிய 3 காவல்துறையினர் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடினர்.

yamaha R15 model bike

புது பைக்கில் அரை லிட்டர் பெட்ரோல் தான் இருக்கும் என்பதால் போலீசார் சுமார் 20 கிலோ மீட்டர் வட்டத்தில் தேட தொடங்கினர்.

சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் மணகெதி சுங்க சாவடியில் சரியாக பெட்ரோல் இல்லாமல் பைக் நிற்க போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் அவரை அரியலூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்துவிசாரணையில் ஈடுபட்டனர்.

அந்த நபர் காஞ்சிபுரத்தை சேர்ந்த கிருஷ்ணன் என தெரியவந்தது. மேலும் அவர் முன்னுக்கு பின் பேசி வருவதால் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை ஈடுபட்டு வருகின்றனர்‌.

பைக்கை ஆன் செய்வது போல் நடித்து அபேஸ் செய்த நபரால் அரியலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.