சென்னையில் டாஸ்மாக் மதுக்கூடத்தில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.
மடுவின்கரையில் உள்ள டாஸ்மாக்கில், வேளச்சேரியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் மது அருந்தச் சென்றுள்ளார். அப்போது அவர் 500 ரூபாய் நோட்டை ஊழியர்களிடம் கொடுத்துள்ளார். அதனை பரிசோதித்ததில் அவை கள்ள நோட்டு என்பது தெரியவந்தது.
ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில், நிகழ்விடத்திற்கு சென்ற காவல் துறையினர் திருநாவுரக்கரசுவை கைது செய்தனர். அவரிடம் இருந்த 8 ஐநூறு ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். ஆலந்தூரை சேர்ந்த மெகபூர் என்பவர் மூலம் இவருக்கு கள்ள நோட்டு கிடைத்தது தெரியவந்துள்ளது.