குற்றம்

பீகார்: கள்ளச்சாராயம் குடித்து 25க்கும் மேற்பட்டோர் இறப்பு - அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட்

பீகார்: கள்ளச்சாராயம் குடித்து 25க்கும் மேற்பட்டோர் இறப்பு - அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட்

Sinekadhara

பீகாரில் கடந்த இரண்டு நாட்களில் கள்ளச்சாராயம் குடித்து 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இவ்விவகாரத்தில் 700 அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கோபால்கஞ்ச் மற்றும் மேற்கு சாம்பரன் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த உயிரிழப்புகள் கள்ளச்சாராயம் குடித்துதான் ஏற்பட்டது என அம்மாநில அமைச்சர் சுனில்குமார் உறுதி செய்துள்ளார்.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அவர், இந்த சம்பவம் உள்ளூர் மட்டத்தில் ஏற்பட்ட அலட்சியம் காரணமாக நிகழ்ந்துள்ளதாகவும், இரண்டு காவல்நிலைய பொறுப்பாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதுவரை 187 லட்சம் லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 60ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.