சென்னை பெருங்களத்தூர் வெங்கடேஸ்வரா நகரில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 600 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
குடியிருப்பு பகுதிக்கு வெளிபுறமாக உள்ள தனி வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தகவல் அடிப்படையில் அங்கு ஆய்வு நடத்திய காவல்துறையினர், இதுதொடர்பாக சத்ராராம், ஆண்டனி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம், 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் போதை பொருள் பதுக்கல் தொடர்பாக முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.