குற்றம்

6 வயது சிறுவன் மர்ம மரணம் - விளையாட்டால் வந்த வினை?

6 வயது சிறுவன் மர்ம மரணம் - விளையாட்டால் வந்த வினை?

webteam

நாமக்கல் அருகே 6 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளைம் அருகே வெடியரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனது மகனுடன் சரோஜினி என்ற பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். அதேபோல் முதல் கணவரை பிரிந்த சரோஜினிக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் டேனியல் (6) என்ற மகன் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை 4 குழந்தைகளும் ஒன்றாக விளையாடியதாக தெரிகிறது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு விளையாடியுள்ளனர். இதில் டேனியல் திடீரென உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த போலீசார் இறந்த சிறுவனின் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.