accused
accused pt desk
குற்றம்

மதுரை சித்திரை திருவிழாவில் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை மிதித்தே கொன்றதாக 6 பேர் கைது

webteam

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடந்த 5 ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மதுரை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கோரிப்பாளையம் வைகை ஆற்றுப் பகுதிக்கு வந்தனர்.

இந்நிலையில், இந்த கூட்டத்தை பயன்படுத்தி மதுரை சோலை அழகுபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், சதீஷ்குமார், செல்வபாண்டி, எம்.கே.புரத்தைச் சேர்ந்த பாண்டி, சூர்யா மற்றும் தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்த கமாலுதீன் ஆகியோர் கும்பலாக சென்று வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி மிரட்டி செல்போன், தங்கநகை உள்ளிட்டவைகளை வழிப்பறி செய்தனர்.

surya prakash

இதை தடுக்க முயன்ற மதுரை வில்லாபுரம், கார்த்தி (30), மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்த்த தினேஷ்குமார், பேரையூரைச் சேர்ந்த யோகிதாஸ் (23), ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியைச் சேர்ந்த திருப்பதி (32), வண்டியூரைச் சேர்ந்த சந்தோஷ் (22) மகராஜன் (23), சண்முகபாண்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோரை கத்தியால் குத்தியும், வாளால் வெட்டிவிட்டும் தப்பிச் சென்றனர். இதையடுத்து காயமடைந்தவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே, இளைஞர் ஒருவரிடம் தங்க செயினை வழிப்பறி செய்ய முயன்றபோது இளைஞர் கூச்சலிட்டதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அந்த வழிப்பறி கும்பலை சேர்ந்த சூர்ய பிரகாஷ் என்ற இளைஞரை மடக்கிப் பிடித்து அங்கிருந்தவர்கள் அவரை மிதித்து அடித்தனர். இதில், சூர்ய பிரகாஷ் உயிரிழந்தார்.

dead body

இச்சம்பவம் தொடர்பான கும்பலை பிடிக்க மதிச்சியம் காவல் ஆய்வாளர் சேதுமணி மாதவன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை செய்தனர். இதில், சூர்ய பிரகாஷை கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய கருப்பாயூரணியைச் சேர்ந்த முத்துப்பாண்டி, குருநாதன், விஜய், முத்து, ராஜேஷ், ராஜபாண்டி ஆகிய 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.