சென்னை அண்ணா சாலையில் நடந்து சென்றவர்களை பிளாஸ்டிக் பைப்புகளை கொண்டு அச்சுறுத்திய இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை அண்ணா சாலையில் இரண்டு பைக்குகளில் சென்ற இளைஞர்கள் ஆறு பேர், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பிளாஸ்டிக் பைப்புகளை சாலையில் தேய்த்து சத்தம் எழுப்பிக்கொண்டு உலா வந்தனர். நடந்து செல்பவர்களை அச்சுறுத்தம் வகையில் ரகளையில் ஈடுபட்டனர்.
இந்தக் காட்சிகளை காரில் சென்றவர்கள் வீடியோவாக பதிவு செய்து, சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். வீடியோவை ஆதாரமாகக் கொண்டு விசாரணை மேற்கொண்ட அண்ணாசாலை காவல்துறையினர் திருவல்லிக்கேணி பகுதியில் இளைஞர்கள் ஆறு பேரையும் கைது செய்தனர். அவர்கள் அண்ணாசாலையைச் சேர்ந்த முத்து, புதுப்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன், விஜி, நவீன் குமார் உள்ளிட்டோர் என்பது தெரிய வந்தது.