திருச்சி ரயில் நிலையத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் உள்ளிட்ட 3 பேரிடமிருந்து சுமார் ஏழு கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயிலில் தங்கம் கடத்தப்படுவதாக குற்றத் தடுப்புப்பிரிவு காவல்துறையினரும் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கும் ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்த ரயில் திருச்சியை அடைந்தபோது, அதிலிருந்த பயணிகளின் உடைமைகளை அவர்கள் சோதனையிட்டனர். அப்போது, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 2 பேர், திருச்சியை சேர்ந்த அருணன் ஆகியோரின் பெட்டிகளில் ஆறு புள்ளி எட்டு கிலோ எடையுள்ள தங்க நகைகள் இருந்தன. வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளும் இருந்தன.
உரிய ஆவணங்கள் இல்லாததால், நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், மூவரையும் ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். நகைகளை எங்கு வாங்கினார்கள், எங்கு கடத்திச் செல்கிறார்கள் என்பது பற்றி விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை வணிகவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்த காவல்துறையினர், நகைகளின் சந்தை மதிப்பு 3 கோடி ரூபாய் என்று தெரிவித்தனர்.