குற்றம்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பம்..குழந்தை பிறந்த நிலையில் 51 வயது நபர் கைது

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பம்..குழந்தை பிறந்த நிலையில் 51 வயது நபர் கைது

kaleelrahman

வந்தவாசி அருகே மனநிலை பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை கர்ப்பமாக்கி குழந்தை பிறந்த நிலையில் 51 வயது நபர் கைது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஏறும்பூர் கிராமத்தில் 26 வயது மன நலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை கர்ப்பமாக்கி குழந்தை பிறந்த நிலையில் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் 51 வயது நபரை போலீசார் கைது செய்தனர்.

வந்தவாசி அடுத்த எறும்பூர் கிராமத்தைச் சேர்ந்த 26 வயது இளம் பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர். இவரை கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு அதே கிராமத்தைச் சேர்ந்த கூலி வேலை செய்து வரும் ரகு என்பவர் யாருக்கும் தெரியாமல் தைலமர தோப்பிற்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார்.  

இந்நிலையில் மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண் பல நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இவரை அவரது தாயார் கடந்த 31ம் தேதி திண்டிவனத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்ற போது வயிற்றுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. .பின்னர் அந்த இளம்பெண்ணிற்கு குழந்தை பிறந்தது.


இதையடுத்து மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் கௌரி நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 51 வயதுடைய ரகு என்பவர்தான் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கியது என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரகுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.