குற்றம்

மெரினா மணலில் சாராயத்தை புதைத்து வைத்து விற்பனை: 3 பெண்கள் கைது

மெரினா மணலில் சாராயத்தை புதைத்து வைத்து விற்பனை: 3 பெண்கள் கைது

kaleelrahman

ஆந்திராவில் இருந்து சாராயம் வாங்கி வந்து மெரினா கடல் மணலில் புதைத்துவைத்து விற்று வந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மெரினா கடற்கரை மணலில் சாராயம் புதைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார், மெரினா கடற்கரையில் உள்ள நேதாஜி சிலைக்கும், கண்ணகி சிலைக்கும் இடைப்பட்ட மணற்பரப்பில் கள்ளச்சாராயம் புதைத்து வைத்திருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து சாரயத்தை மணலில் புதைத்து வைத்து விற்வபனை செய்யததாக மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஜென்தூஸ் கோஸ்லயா, சில்பா போஸ்லே, சுனந்தா ஆகியோரை கைது செய்த போலீசார், மணலில் புதைத்து வைத்திருந்த் 35 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து மெரினா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், நாடோடிக் குடும்பமாக தங்கி வரும் இவர்கள், ஆந்திராவில் இருந்து சாராயம் வாங்கி வந்து மெரினா மணலில் புதைத்து வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது. இவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.