குற்றம்

3 அரசு பேருந்துக்கு தீ வைப்பு

3 அரசு பேருந்துக்கு தீ வைப்பு

webteam

புதுச்சேரியில் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 அரசுப் பேருந்துகள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி பணிமனையில் 3 அரசு பேருந்துகள் நிறுத்தி வைக்‌கப்பட்டிருந்தன. இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் பேருந்துகளுக்கு தீவைத்துவிட்டு தப்பியோடியுள்ளனர். பின்பு பணிமனையி‌ல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். அதில், ஒரு அரசு ‌பேருந்து முற்றிலும் எரிந்து நாசமடைந்தது. மற்ற இரண்டு‌ பேருந்துகளில் உள்ள இருக்கைகள் ஒருபுறம் முழுவதும் எரிந்து விட்டன. பேருந்திற்கு வைக்கப்பட்ட தீயால் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர், குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.