accused
accused pt desk
குற்றம்

சென்னையில் 80 சவரன் நகை கொள்ளை போன விவகாரம்: வழக்கறிஞர் உட்பட 3 பேர் கைது

PT WEB

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

சென்னை போரூர் உதயா நகர், பேஸ் 2 பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன் (55). மருந்தக கன்சல்டன்சி நிறுவனம் நடத்தி வரும் இவர், கடந்த வாரம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டின் பூட்டை உடைத்து 85 பவுன் நகைகளை மர்ம் நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர்.

flats

முடிவில் வில்லிவாக்கத்தை சேர்ந்த சூர்யா (என்ற) கில்லி சூர்யா (32), தாமஸ் (24), வக்கீல் வினோத் (35) ஆகிய மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் சம்பவத்தன்று பூட்டியிருந்த வீட்டிற்குள் நுழைந்த சூர்யா, பீரோவை உடைத்து அதிலிருந்த நகைகளை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து கைரேகை பதிவாகாமல் இருக்க கையுறைகளை அணிந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரிடம் இருந்து 50 பவுன் நகைகளை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Police station

மேலும் கொள்ளையடித்த நகைகளை அவரது நண்பரான வக்கீல் வினோத்திடம் கொடுத்த நிலையில், அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சூர்யா மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.