குற்றம்

அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கு: 38 பேருக்கு தூக்கு, 11 பேருக்கு ஆயுள் தண்டனை

நிவேதா ஜெகராஜா

அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்குகளில் 38 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற, 2008 அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கு பற்றிய விசாரணையில், 49 குற்றவாளிகளில் 11 பேருக்கு ஆயுள் தண்டனையும், 38 பேருக்கு தூக்கு தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 21 குண்டுகள் வெடித்ததில், 56 பேர் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் 240 பேருக்கு காயம் ஏற்பட்டிருந்தது.

இவர்கள் அனைவரும் தீவிரவாதம் உள்ளிட்ட சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கையில் ஈடுபட்டதாக பிரிவு 16, ஐ.பி.சி. பிரிவு 302 (கொலை), பிரிவு 120-பி (குற்றவியல் சதி), பிரிவு 307 (கொலை முயற்சி), பிரிவு 121-ஏ (நாட்டுக்குள் போர் தொடுப்பதற்கான சதி அல்லது தேசத்திற்கு எதிராக போர் தொடுக்கும் முயற்சி), பிரிவு 124-ஏ (தேசத்துரோகம்), வெடிபொருட்கள் உபயோகிப்பதற்கு எதிரான சட்டம் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் சட்டம் உள்ளிட்டவற்றின்கீழ் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.