விருதுநகரில் 15 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரது உறவினர் உட்பட இருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் அருகேயுள்ள மூளிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி தங்கமுடி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருடைய மகள் பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மனவளர்ச்சி குன்றிய 15 வயது சிறுமி. இவர் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அப்போது மனவளர்ச்சி குன்றிய சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. அதைத்தொடர்ந்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு இது குறித்து விசாரணை செய்து வந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் அண்ணன் முறையான கணேசன் மற்றும் தையல் கடை நடத்திவரும் பாண்டி ஆகிய இருவரும் நீண்ட நாட்களாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து பாண்டி மற்றும் கணேசன் ஆகிய இருவரும் காவல்துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் கர்ப்பமான பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய சிறுமி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உறவினரால் நடந்த இந்த வன்கொடுமை அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.