உத்தரப்பிரசேத்தில் 3வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டதில் 3வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போஸ்கோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வீட்டில் தனியாக விளையாடிக்கொண்டிருந்த சிறுமிக்கு சாக்லெட்டுகளை வாங்கிக் கொடுத்து அந்த வாலிபர் தனது இல்லத்திற்கு தூக்கிச் சென்றுள்ளார். பிச்சுக் குழந்தை என்றுகூட பாராமல் அந்த வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.இதனையடுத்து குழந்தை வலியால் துடிதுடித்துள்ளது.இந்தக்கொடூர சம்பவத்தை மறைக்க சிறுமியை வீட்டில் உள்ள ஒரு பெட்டியில் போட்டு மூடியுள்ளார்.
குழந்தை வீட்டில் இல்லாததால் பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் தேடி உள்ளனர்.அப்போது இந்த வாலிபரின் வீட்டில் சிறுமியின் அழுகுரல் கேட்டுள்ளது.அவரது வீட்டிற்கு சென்று பார்த்து போது வாலிபர் அங்கு இல்லை.குழந்தையின் அழுகுரல் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. அங்கு ஒரு பெட்டியில் இருந்து சத்தம் கேட்டதையடுத்து சிறுமியை மீட்டுள்ளனர்.இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். சிறுமியின் உறவினரான அந்த வாலிபருக்கு வயது 17. அவர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உறவினரே இதுபோன்ற கொடூர சம்பவத்தை செய்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.